என் மிச்சத்தில்தான் நீங்கள் வாழ்கிறீர்கள்!” – நிக்கி தம்போலி அதிரடி.

திரைப்பட நடிகை நிக்கி தம்போலி எப்போதுமே தனது துணிச்சலான பேச்சுக்கும், கவர்ச்சியான தோற்றத்திற்கும் பெயர் பெற்றவர். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் மற்றும் அதன் கீழ் உள்ள வரிகள் இணையத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

பாலிவுட் நடிகை மற்றும் பிக் பாஸ் பிரபலம் நிக்கி தம்போலி (Nikki Tamboli) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிரடியான வரி

“பொறாமையா? நான் முதலில் ஆதிக்கம் செலுத்திய ஒரு இடத்திற்காகவா? கொஞ்சம் சீரியஸாக இருங்கள்.”

“நான் விட்டுச் சென்ற மீதங்களை வைத்துக்கொண்டு நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள்!” என்று மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிக்கியின் இந்த ‘போல்ட்’ (Bold) அவதாரத்தைப் பார்த்த ரசிகர்கள், “யாரைச் சொல்கிறார் நிக்கி?” என்று கமெண்ட்களில் விவாதித்து வருகின்றனர். எதற்கும் அஞ்சாத அவரது இந்த ‘ஆட்டிடியூட்’ (Attitude) தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.











