செய்தி

ட்ரோனால் பெர்லினில்(Berlin) தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்ட இரவு விமானச் சேவைகள்

பெர்லின் பிரேண்டன்பர்க் விமான நிலையத்தில்(Berlin Brandenburg Airport) நேற்றய தினம் (31) இரவு விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

ஆளில்லா வானூர்திகள் காணப்பட்டதே அதற்குக் காரணம் என்று விமான நிலையப் பேச்சாளர் கூறினார். அண்மையில் ஐரோப்பாவில் அத்தகைய சில மிரட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நேற்றய தினம் இரவு 8:08 – 9:58 இடையில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டன. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்கச் சென்ற விமானங்கள் ஜெர்மனியின் மற்ற நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாகப் பேச்சாளர் சொன்னார்.

இரவு நேரத்தில் சில விமானச்சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையும் பின்னர் அகற்றப்பட்டது. தற்போதைக்கு ஆபத்துத் தவிர்க்கப்பட்டதாகப் பேச்சாளர் கூறினார்.

பிரேண்டன்பர்க் மாநிலக் காவல்துறை, ஆளில்லா வானூர்தி காணப்பட்டது குறித்த புகார் கிடைக்கப்பெற்றதை உறுதிசெய்தது.

சுற்றுக்காவல் வாகனம், ஆளில்லா வானூர்தியைக் கண்டுபிடித்தது. ஆனால் அதனை இயக்கியவர் யார் என்பது இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

விமான நிலையங்களிலும் முக்கியமான ராணுவத் தளங்களிலும் காணப்படும் ஆளில்லா வானூர்திகள் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக ஜெர்மானியத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

டென்மார்க், நார்வே, போலந்து முதலிய நாடுகளில் உள்ள விமான நிலையங்களும் அண்மைக் காலத்தில் அடையாளம் தெரியாத ஆளில்லா வானூர்திகள் காணப்பட்டதால் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தன.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி