உலகம்

நைஜீரியா – கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாத குழு தாக்குதல் ;எழுவர் பலி, 150 பேர் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இங்கு கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது.

இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். கிராமத்தில் இருந்த உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த பயங்கரவாத கும்பல் தடுக்க முயன்ற கிராமத்தினர் 3 பேர், அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் 4 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.

பின்னர், கிராம மக்கள் 150 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இதையடுத்து, அந்த கிராமத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content