நியூசிலாந்து தொடர் – உபாதை காரணமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், நேற்று ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டி வதோதராவில்(Vadodara) நடைபெற்றது.
இதில், சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது காயமடைந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்(Washington Sundar) நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.





