கட்டாரில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான நியூசிலாந்து வீரர்
நியூசிலாந்து வீரர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து அணியின் சக வீர்ர்கள் கட்டாருக்கு எதிரான கால்பந்து போட்டியை பாதியில் புறக்கணித்தனர்.
நியூசிலாந்து மற்றும் கட்டார் அணிகள் இடையிலான நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஆஸ்திரியாவில் நடைபெற்றது. அதில் சமோவா பழங்குடி இனத்தை சேர்ந்த நியூசிலாந்து வீர்ர் மைக்கேல் போக்சாலை, கட்டார் வீர்ர் ஒருவர் இனரீதியாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
நடுவரிடம் புகாரளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் இரண்டாம் பாதி ஆட்டத்தை நியூசிலாந்து வீர்ர்கள் புறக்கணித்தனர். இந்த போட்டியில் நியூசிலாந்துக்கு 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
(Visited 6 times, 1 visits today)