‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை விதித்துள்ள நியூயார்க் அரசு
நியூயார்க் நகர அரசு, ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்துள்ளது. ஏற்கனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாள்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நியூயார்க் சைபர் கிரைம் பொலிஸ் தரப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “டிக்டாக், நகரின் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்து உள்ளார்.
இருப்பினும் டிக்டாக் இதனை மறுத்துள்ளது. டிக்டாக் தரப்பில், நாங்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாத்து வருகிறோம், எந்த தகவல்களையும் சீன அரசுடன் பகிரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.