கருத்து & பகுப்பாய்வு

நியூயோர்க் மேயர் தேர்தல் – இந்திய வேர்களின் வெற்றி உலகை திரும்பி பார்க்க வைத்தது யார் இந்த ஸோஹ்ரான் மம்தானி?

அமெரிக்காவின் அரசியல் மேடையில் தற்போது இடம்பெற்ற தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோபத்தையும், உலக அரசியலின் கவனத்தையும் ஒரே நேரத்தில் ஈர்த்திருக்கிறார் இந்திய வம்சாவளியான ஸோஹ்ரான் மம்தானி.

இவர் வெற்றியால், அமெரிக்க அரசியலில் புதிய யுகம் ஆரம்பமாகுமா என்பது தான் அனைவரதும் கேள்வியாக உள்ளது.

தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தல் உலக முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்க நியூயோர்க் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.

நியூயோர்க் அமெரிக்காவின் மிகப் பெரிய நகரம். நிதி, கலை, கல்வி, ஊடகம் ஆகியவற்றின் மையம் என்றும் கூறலாம்.வாய்ப்புகளுக்கு பெயர் பெற்ற
நியூயோர்க்கில் பல நாடுகளிலுள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நகரத்தின் மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் (Eric Adams), ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து நியூயோர்க் நகர மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக 34 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார். இவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சனம் செய்பவர்.

அத்துடன் இந்த தேர்தலில் ட்ரம்பின் குடியரசு கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார் .

தேர்தலில் மம்தானிக்கும் ட்ரம்ப் கட்சி வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் ட்ரம்ப், மம்தானியை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருக்கிறார். ட்ரம்பின் விமர்சனத்தால் நியூயோர்க் மேயர் தேர்தல் உலக முழுவதும் கவனம் பெற்றது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால், நியூயோர்க் நகரத்திற்கான மத்திய நிதியை நிறுத்தி வைப்பதாகவும்
அச்சுறுத்தினார்.

எவ்வாறாயினும் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் அனைத்து சவால்களையும் கடந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி மாபெரும் வெற்றி பெற்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

நியூயோர்க் நகரின் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் இஸ்லாமிய மேயர்
என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இளம் வயது மேயர் என பல்வேறு பெருமைகளை சுவீகரித்துள்ளார்.

தன்னுடைய தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மம்தானி, இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் 1947 ஆண்டு ஒகஸ்ட் மாதம் 14 நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய வெற்றி உரையை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பித்தார்.

அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

“இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும் , ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது” என்ற நேருவின் பேச்சை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்தார்.

அவருடைய கருத்துக்கள் மெய் சிலிர்க்கும் வகையில் இருந்தது. இளமை, சிறந்த பேச்சுத் திறன், ஆளுமை , சமூக ஊடகங்களில் பிரபலம் என இந்த தலைமுறை
அரசியல் தலைவருக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவராக மம்தானி அனைவராலும் பார்க்கப்பட்டார்.

மம்தானிக்கும் இந்தியாவிற்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உள்ளது. ஸோஹ்ரான் குவாமே மம்தானி 1991 ஆம் ஆண்டு உகாண்டாவில் பிறந்தவர்.

புரட்சியாளரும் கானாவின் முதல் பிரதமருமான குவாமே நக்ருமாவின் நினைவாக மம்தானியின் பெயரில் குவாமே என்பது சேர்க்கப்பட்டுள்ளது.

மம்தானியின் தாயார் புகழ்பெற்ற இந்திய அமெரிக்க திரைப்பட இயக்குநர் மீரா நாயர் என்பதுடன் தந்தை கொலம்பியா பல்கலைகழக பேராசிரியர் மஹ்மூத் மம்தானி.

மம்தானிக்கு 05 வயதாகும் போதே குடும்பம் தென்னாப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது. அடுத்த 02 ஆண்டுகளிலேயே இவர்கள் குடும்பமாக நியூயோர்க் நகரத்திற்கு வந்தனர்.

தனது ஆரம்ப பாடசாலை நாட்களை கழித்த நியூயோர்க் நகரத்திற்கே தற்போது மேயராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார் மம்தானி.

இவ்வாறிருக்கையில் மம்தானிக்கும் ட்ரம்புக்கும் இடையிலான மோதல்கள் அரசியல் உலகில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்பது அனைவராலும்
அறியப்பட்ட விடயம்.

இதேவேளை அமெரிக்காவின் சின்சினாட்டி நகரின் மேயராகவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அஃப்தாப் புரேவல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் இரண்டாவது முறையாக மேயராக வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் கோரி போமானை தோற்கடித்து சின்சினாட்டி நகர மேயராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

Zohran Mamdani போன்ற இடதுசாரி கொள்கைகள் கொண்ட வேட்பாளர் நியூயோர்க் மேயராக வெற்றி பெற்றது, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சிக்கு அரசியல் ரீதியாக பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும்.

ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மேயர்கள் இடையேயான உறவு ஏற்கனவே பதற்றமானது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது.

மம்தானி நியூயோர்க் நகரத்திற்கான மத்திய நிதியுதவிகளை (Federal Funds) குறைக்கலாம் என்ற ட்ரம்பின் எச்சரிக்கை, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வீட்டு வசதி, போக்குவரத்து, கல்வி முதலிய திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது நகர பொருளாதாரத்தில் தற்காலிக நிதி தட்டுப்பாட்டை உருவாக்கும்.

மேலும் மம்தானி முன்வைக்கும் கொள்கைகள் வாடகை கட்டுப்பாடு, சமூக நலத்திட்டங்கள், பெரிய நிறுவனங்களுக்கு கூடுதல் வரி போன்றவை வணிக வட்டாரங்களில் சிலருக்கு கவலைக்குரியதாக இருக்கலாம்.

இதனால் சில தனியார் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டாலும், நீண்டகாலத்தில் நகரத்தின் சமத்துவமான வளர்ச்சி நம்பிக்கையை அதிகரிக்கும்.

நியூயோர்க் உலகின் நிதி மையம் என்பதால், இங்கு எடுக்கப்படும் கொள்கைகள் உலக நிதி சந்தையையும் பாதிக்கலாம்.

மம்தானி மக்கள் மையப்படுத்திய நகர திட்டங்களை முன்னெடுத்தால், சமத்துவம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றை வலுப்படுத்தும்.

இந்திய வம்சாவளி ஒருவர் அமெரிக்கா போன்ற சக்திவாய்ந்த நகரத்தின் மேயராக வருவது இந்தியா–அமெரிக்க உறவில் ஒரு மனப்பூர்வ நெருக்கத்தை உருவாக்கும்.
அதேசமயம், ட்ரம்ப் இதனை அரசியல் தாக்குதலாகக் பார்ப்பதால், வெளிநாட்டு வம்சாவளி தலைவர்கள் பற்றிய அரசியல் விவாதம் அமெரிக்காவில் மீண்டும் தீவிரமடையலாம்.

மொத்தத்தில் குறுகிய காலத்தில் மத்திய அரசுடனான நிதி தகராறு, முதலீட்டாளர்களின் எச்சரிக்கை மனநிலை போக்கு காணப்படும். எவ்வாறாயினும் நீண்டகாலத்தில் மக்கள் மைய பொருளாதாரம், சமூக சமநிலை, வேலை வாய்ப்பு விரிவாக்கம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, முன்னேற்றமும் மோதலும் இணைந்த விளைவை காணக்கூடியதாக இருக்கும்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை
error: Content is protected !!