முடிந்தது கொண்டாட்டம்… குடும்பத்துக்கு பிரியாவிடை கொடுத்தார் அஜித்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பொங்கல் கொண்டாட்டமாகவே விடாமுயற்சி படம் ரிலீசாகவிருந்த நிலையில் படம் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. அடுத்ததாக குடியரசு தினக் கொண்டாட்டமாக வரும் 23ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து கோடைக் கொண்டாட்டமாக குட் பேட் அக்லி படமும் ரிலீசாகவுள்ளது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இதனிடையே அவர் இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய ரேஸிங் பயிற்சியிலும் ஈடுபட்டுவருகிறார். சமீபத்தில் தன்னுடைய ரேஸிங் காரையும் ரசிகர்களிடையே அவர் அறிமுகப்படுத்தினார். சினிமா, ரேஸிங் என பிசியாக இருந்தாலும் அன்பான பாசமான தந்தையாகவும் சிறப்பான கணவராகவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார் அஜித்.
அந்த வகையில் புத்தாண்டையொட்டி சிங்கப்பூரில் அஜித், ஷாலினி மற்றும் குழந்தைகள் அங்கு தங்களுடைய கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களை நிறைவு செய்துவிட்டு ஷாலினி, அனௌஷ்கா மற்றும் ஆத்விக் மூவரும் சென்னை திரும்பியுள்ளனர். முன்னதாக அவர்களை சிங்கப்பூரில் வைத்து கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்திருந்தார் அஜித்.
இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இந்த வீடியோவில் தன்னுடைய மகனுடன் துள்ளி குதித்தபடி வரும் ஷாலினி, அஜித்தை கட்டியணைத்து கிளம்புகிறார். தன்னுடைய மகன், மகளுக்கும் அஜித் பிரியாவிடை கொடுக்கிறார். தொடர்ந்து அவர் தன்னுடைய ரேஸிங் பயிற்சிக்காக துபாய்க்கு தனியாக செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் க்யூட் ஃபேமிலி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.