உலகம்

மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்பட புது ரக போதைப்பொருள் பாவனை

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் குஷ் ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.இந்த குஷ் போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த குஷ் ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது.

இதன்படி குறித்த போதைப்பொருளின் பாவனை அப்பகுதி மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புளிலிருந்து குஷ் போதைப்பொருளைத் தயார் செய்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Sierra Leone: 'Zombie drug' kush sending youth to dig up graves, skeletons  - India Today

சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகளை இந்த கும்பல் தோண்டியுள்ளதாக அந்த நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குஷ் ரக போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.மேலும் குறித்த போதைப்பொருளை உட்கொள்வதன் மூலம் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!