சீனாவில் சத்திரசிகிச்சையின்றி மூளையின் மாற்றங்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்

சீனாவில் அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் அதிநவீன MRI இமேஜிங் ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதனை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
மூளை-கணினி இடைமுக (BCI) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த MRI ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன MRI இமேஜிங் ஸ்கேன் கடுமையான நரம்பு நிலைகளைக் கண்காணிக்கவும் மற்றும் மன ஆரோக்கியத்தை மதிப்பிடவும் உதவும் எனக் கூறப்படுகிறது.
புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அல்சைமர், பார்கின்சன் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் வழியாக அல்சைமர், பார்கின்சன் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 3 visits today)