இலங்கையில் யாசகம் ஏந்துபவர்களுக்கு அமுலாகும் புதிய கட்டுப்பாடு

இலங்கையில் பல்வேறு இடங்களிலும் வீதி மற்றும் மின் சமிக்ஞைகளுக்கு அருகில் யாசகம் ஏந்துபவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வீதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரினால் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான இடங்களில் கடமையிலிருக்கும் சில பொலிஸார் கூட யாசகர்கள் மற்றும் இந்த வியாபாரிகளின் நடத்தை குறித்து கவலைப்படுவதில்லை என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில யாசகர்கள் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இளம் குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து, அவர்களை யாசகம் பெறுவதற்கு அழைத்துச் செல்வதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.