ஐரோப்பா

பிரித்தானியாவில் புகையிலை பாவனையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம்!

ஒருமுறைப்ப பயன்படுத்தியப் பின் தூக்கிய எறியப்படும் வேப்களை குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பல திட்டங்களை இன்று (29.01) அறிவித்துள்ளார்.

இளைய தலைமுறையினர் புகையிலை வாங்குவதைத் தடுக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

புதிய திட்டங்களின் கீழ், vape சுவைகள் மீது கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும், சாதாரண பேக்கேஜிங்கிற்கான தேவை, மற்றும் குழந்தைகளின் கவர்ச்சியை குறைக்கும் வகையில் vapes அல்லது e-சிகரெட்டுகள் பொதிசெய்யப்படுவதில் மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் சட்டப்பூர்வமாக சிகரெட்களை விற்பனை செய்வதை தடுப்பதுடன், இந்த மாற்றங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் நீண்ட பாரம்பரியத்தை விட்டுச் செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் புகைப்பிடத்தல் காரணமாக 80,000 இறப்புகள் பதிவாகுவதாக தரவுகள் காட்டுகின்றன.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்