சிங்கப்பூரில் கடன்தொல்லையில் இருப்பவர்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்
சிங்கப்பூரில் கடன்தொல்லையால் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
Credit Counselling Singapore அமைப்பு 2 ஆண்டு முன்னோட்டித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு முதலில் உதவி வழங்கப்படும். இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,150 பேர் கடனைச் சமாளிக்க முடியாமல் அந்த அமைப்பின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்தாண்டைவிட அது 18 விழுக்காடு அதிகமாகும். தற்போது கடன் சிக்கலில் உள்ளவர்களுக்கு Credit Counselling Singapore அமைப்பு பெரும்பாலும் பயிற்சிக் கூட்டங்களை நடத்துகிறது.
புதிய திட்டத்தின்கீழ் கடன்பட்ட குடும்பங்களுக்கு உதவ நிதிப் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படுவார்.
வருமானத்தை உயர்த்தி, செலவைக் குறைத்து ஒவ்வொரு மாதமும் கடனை எப்படிச் சமாளிப்பது என்று அவர் சொல்லிக் கொடுப்பார்.
Credit Counselling Singapore இவ்வாண்டு அதன் 20ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது.
இருபது ஆண்டுக்குமுன் அந்த அமைப்பைத் தொடங்குவதில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் முக்கியப் பங்கு வகித்தார்.