புதிய திட்டம் விரைவில் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு
புதிய ‘Visit Sri Lanka’ என்ற மூலோபாய சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார மேம்பாட்டிற்காக அதிக செயலூக்கம் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்களாக 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர்வதை நோக்காக கொண்டதாக அரசாங்கத்தின் இந்த திட்டம் அமையும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் சில மாதங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மதிப்பீட்டின்படி, இலங்கைக்கு வருடாந்தம் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் உள்ளது என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளாக இருப்பார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலகளாவிய சுற்றுலா சந்தையில் போட்டியிடும் வகையில் இலங்கையின் சுற்றுலாத்துறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.