செய்தி

ஜெர்மனியில் வாகன சாரதிகள் தொடர்பில் அமுலுக்கு வரம் புதிய நடைமுறை

ஜெர்மனியில் வயதானவர்கள் வாகனம் செலுத்தக் கூடிய தகுதியில் உள்ளார்களா என்பதை குறித்து பரிசீலனை செய்யப்படவுள்ளது.

ஜெர்மனியில் வயதானவர்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடைமுறையை அமுல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

70 வயதிற்கு மேற்பட்ட சாரதிகளுக்கு தகுதிகாண் பரீட்சைககக்கு உட்படுத்த வேண்டும் என வாகனம் தொடர்பில் அனுபவங்கள் மிக்க அமைப்புக்கள் கோரியுள்ளன.

இதேவேளை, ஜெர்மனியில் வாகன அனுமதி பத்திரம் பெறும் போது முதற்தடவையில் 60 வீதமானவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை என புதிய புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன.

வாகன சாரதி அனுமதி பத்திரத்துக்கான எழுத்து மூலமான பரீட்சையில் 30 சதவீதமானவர்களே தேர்ச்சி பெறுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் மொத்த சனத்தொகையில் 18.9 மில்லியன் மக்கள் வயோதிபர்களாக உள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் வயோதிபர்கள் வாகனம் செலுத்தக் கூடிய மன ஆரோக்கியத்துடன் உள்ளனரா என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நடைமுறை அமுலில் உள்ளது. அதனை ஜெர்மனியிலும் அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி