பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வேவை தேடுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக பிரான்ஸில் வேலை தேடுவோருக்கு உதவும் France Travail அமைப்பு அறிவித்துள்ளது.
வேலை தேடுவோரில் எந்த செயற்பாடுகளும் இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.8% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
தற்போது பிரான்ஸில் A பிரிவில் 3.1 மில்லியன் பேர் தங்களை பதிவு செய்துள்ளனர்.
அதேவேளை, குறைந்தபட்ச செயற்பாடுகளில் பிரிவு B மற்றும் C எண்ணிக்கை 5.46 மில்லியனாக உள்ளது. இந்த எண்ணிக்கையும் 0.5% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இத்தகவல்களை France Travail புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)