கடன் வாங்கியவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்க வேண்டும் – MPஇராதாகிருஷ்ணன்
கடன் வாங்கியவர்களுக்கு புதிய சலுகைகள் இந்த அரசாங்கம் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அல்லது அடகு வைத்தவர்கள் குறிப்பிட்ட திகதியில் அதனை செலுத்தாவிட்டால் அவை அரசுக்கு சொந்தமாகும் என சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
நாடு தற்பொழுது பொருளாதார பின்னடைவில் இருக்கும் போது, சாதாரண மக்கள் கடன் வாங்கும் போது அவர்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
ஆகவே கடன் வாங்கிய சாதாரண மக்களுக்கு அரசாங்கம் புதிய சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
(Visited 4 times, 1 visits today)