இலங்கை கல்வித் திட்டத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்
இலங்கை பாடசாலைகளில் தரம் 6 ஆம் முதல் 8 வரையான பாடவிதானங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய, பாடவிதானங்களில் குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பின் போது க.பொ.த சாதாரண தரத்தில் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குடியுரிமை பாடத்தில், 6ஆம் தரத்துக்கான சட்டக்கல்வி, மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கமான சமூகத்திற்காக சட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)





