வட அமெரிக்கா

அமெரிக்காவில் வரிவிதிப்பில் புதிய மாற்றங்கள் – டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரியே அந்தந்த நாடுகளுக்கு விதிக்கும் வகையிலான வரித் திருத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்துள்ளார்.

மானியங்கள், வாட் போன்றவற்றில் நியாயமற்ற வணிக நடைமுறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் டிரம்ப் இதனை அறிவித்துள்ளார்.

அமெரிக்க பொருளாதாரத்தைக் காத்துக்கொள்ளும் வகையில், அமெரிக்க தயாரிப்புகளுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரி அளவை குறைக்க அல்லது முழுமையாக நீக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வரும் நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஜனாதிபதி டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது,

”வணிகத்தில் நேர்மையான ஒரு முடிவை எடுத்துள்ளேன். அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரியின் அளவே அந்தந்த நாடுகளிடம் வசூலிக்கப்படும். அதிகமாகவும் இருக்காது; குறைவாகவும் வசூலிக்கப்படாது.

அமெரிக்காவின் கொள்கைப்படி, வரியைக் காட்டிலும் கடுமையான வாட் முறையைக் கடைபிடிக்கும் நாடுகளை கருத்தில் கொள்வோம். வணிகப் பொருள்கள், தயாரிப்புகள் மற்ற எந்த பெயரிலும் எதையாவது அனுப்பும் நாடுகள், நியாயமற்ற முறையில் அமெரிக்காவை பாதிக்கின்றன. இது ஏற்றுக்கொள்ளப்படாது.

இதேபோன்று சில நாடுகள் அவர்களின் எல்லைக்குள் எங்கள் தயாரிப்புகளை நுழையவிடாமல் கட்டணங்களை வசூலிக்கின்றன அல்லது எங்கள் வணிகங்களை செயல்பட அனுமதிப்பதில்லை.

அமெரிக்கா அதிக வரி வசூலிப்பதாக சில நாடுகள் கருதினால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியைக் குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.

உங்கள் தயாரிப்புகளை அமெரிக்காவில் மேற்கொண்டால் அதற்கு எந்த வரிவிதிப்பும் இல்லை. பல ஆண்டுகளாக மற்ற நாடுகளால், நியாயமற்ற முறையில் அமெரிக்கா நடத்தப்பட்டுள்ளது. அது நட்பு நாடாக இருந்தாலும் சரி, எதிரி நாடாக இருந்தாலும் சரி.

வணிகத்தில் முன்பு இருந்த கடினத்தன்மை மற்றும் நியாயமற்ற முறைக்கு எதிராக இந்த புதிய வரிவிதிப்பானது நேர்மையான மற்றும் வளமான வணிகச் சூழலை உருவாக்கும்.

நிதிச் செலவில் பல ஆண்டுகளாக பல நாடுகளுக்கு அமெரிக்கா உதவியுள்ளது. அந்த நாடுகள் தற்போது இதனை நினைவுகொள்ள வேண்டிய நேரம் இது. எங்களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். அமெரிக்க தயாரிப்புகளுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரியே மற்ற நாடுகளுக்கும் அமெரிக்கா விதிக்கும் என்ற பரஸ்பர நிதிக்கொள்கையை வணிகத்தில் உருவாக்கும் வகையில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்