இரகசியம் காப்பது குறித்து புதிய கணக்காய்வாளர் நாயகம் சத்தியம்!
புதிய கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜயரத்ன Ms. Samudika Jayarathna , சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன Jagath Wickramaratne முன்னிலையில் இகரசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார்.
2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 9வது பிரிவுக்கு அமைய கணக்காய்வாளர் நாயகம் மற்றும் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக அவர் இரகசியம் பேணுவதற்கான சத்தியம் செய்துகொண்டார்.
இந்நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியாவார்.
இச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.





