இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட புதிய நியமனம்!
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வு இன்று (29.01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
லொஹான் ரத்வத்த இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியதோடு, அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திலும் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.
(Visited 5 times, 1 visits today)