அவசரக் கூட்டத்தை கூட்டிய நெதன்யாகு – மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம்?
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை ஹமாஸ் (Hamas)மீறுவதால் ஏற்படக்கூடிய எதிர்வினை குறித்து விவாதிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu ) அவசரக் கூட்டத்தைக் கூட்டுவார் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்த “மீறல்களுக்கு” பதில் அளிப்பது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்துடன் அவர் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பணயக்கைதிகளின் எச்சங்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸால் திருப்பி அனுப்பப்பட்ட பணயக்கைதியின் எச்சங்கள், காசாவில் இஸ்ரேலிய துருப்புக்களால் மீட்கப்பட்ட பணயக்கைதியின் உடல் பாகங்கள் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது போர் நிறுத்தத்தின் தெளிவான மீறல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையிலேயே அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.





