வடகொரியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவரை மீட்க பேச்சுவார்த்தை!
வட கொரியாவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க இராணுவ வீரர் குறித்து வடகொரியாவுடன் உரையாடல்களை தொடங்கியுள்ளதாக ஐ.நா கட்டளையின் துணைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா கட்டளையின் துணைத் தளபதி ஆண்ட்ரூ ஹாரிசன், 1950-53 கொரியப் போரின் சண்டையை நிறுத்திய போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தகவல் தொடர்பு வரி மூலம் இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை டெக்சாஸின் ஃபோர்ட் பிளிஸ்ஸுக்குச் செல்லவிருந்த கிங் எல்லையைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் வடகொரியா இது குறித்து மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவரது நல்வாழ்வு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்ததோடு, அவரைப் பற்றிய தகவல்களுக்கான கோரிக்கைகளை வட கொரியா புறக்கணிப்பதாகக் கூறியுள்ளனர்.