“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” தொடர்பில் தனுஷ் முக்கிய அறிவிப்பு

கடந்த மாதம் திரையரங்கில் வெளிவந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான தனுஷின் இயக்கத்தில் மூன்றாவதாக வெளிவந்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் தனுஷின் அக்கா மகன் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.
அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் என ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், திரையில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளிவரவுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான தனுஷ் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதில், NEEK திரைப்படம் வருகிற 21ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கு ஓடிடியில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைபோகிறது என்று.