தெற்கு கடலில் 53 கிலோ ஹெரோயினை ஏற்றிச்சென்ற படகு ஒன்றை சுற்றிவளைத்த கடற்படை

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன்படி, படகில் மொத்தம் 53 கிலோகிராம் ஹெராயின் கொண்டு செல்லப்பட்டதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் தற்சமயம் குறித்த படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது படகில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 1 visits today)