தேசிய சிறைக்கைதிகள் தினம்: பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை
தேசிய சிறைக்கைதிகள் தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (13) மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1 பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் இந்த நிகழ்வு நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



(Visited 10 times, 1 visits today)





