கலிபோர்னியாவில் களமிறக்கப்பட்ட தேசிய காவல் படை – சிக்கலில் ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடிவரவு கொள்கைக்கு எதிராக, கலிபோர்னியா மாநிலத்தில் மக்கள் பலர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக, டிரம்ப் தேசிய காவல் படையை கலிபோர்னியாவில் களமிறக்கியுள்ளார்.
இந்த நடவடிக்கையைச் சட்டவிரோதமானது எனக் கூறியுள்ள மாநிலத்தின் வழக்கறிஞர், ஜனாதிபதி பொதுஜன உரிமைகளை அடக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, கலிபோர்னியா மாநில ஆளுநர் கெவின் நியூசம் (Gavin Newsom), ஜனாதிபதியின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை, நீதித் துறையின் கூட்டாட்சி வழக்கறிஞர், “மாநிலத்தில் பெருமளவில் வன்முறை நடக்கிறது; அதனால் பாதுகாப்புக்காக தேசியக் காவல் படையை அனுப்புவது அவசியம்,” என தெரிவித்துள்ளார்.
தற்போது, கலிபோர்னியாவில் 4,000 தேசியக் காவல் படையினரும், 700 ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.