புற்றுநோய் பாதிப்பு காரணமாக நமீபியா அதிபர் காலமானார்…

தெற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நமீபியா. இந்நாட்டின் அதிபராக ஹஜி ஜிங்கொப் (82) செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, அதிபர் ஹஜி கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தலைநகர் விண்ட்ஹொக்-யில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிபர் ஹஜி ஜிங்கொப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிபர் ஹஜி ஜிங்கொப்பின் மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமீபியா அதிபர் ஹஜி உயிரிழந்த நிலையில் இடைக்கால அதிபராக நங்கொலா முபுமா செயல்பட்டு வருகிறார்.
(Visited 58 times, 1 visits today)