நாமல் போடும் அடுத்தக்கட்ட திட்டம் – வெளிவந்த முக்கிய தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ‘எதிர்க்கட்சி படை’ ஒன்றை உருவாக்கப் போவதாக பொஹட்டுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாமலை சுற்றி அமைச்சுப் பதவிகள் கிடைக்காத சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட மேலும் பல புதிய எம்.பி.க்களின் உதவியுடன்
நாமல் தலைமையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அது எப்படியாவது வெற்றியடையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உயர்த்துவது குறித்து இந்தக் குழு ஆலோசித்துள்ளது.
இந்த நாட்களில் உறுப்பினக்களை கூட்டிச் செல்லும் நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)