மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ.. தீர்மானம் நிறைவேற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிப்பதற்கான யோசனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மாத்தளை மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், தோல்வியடைந்தால் பிரதமர் பதவியைப் பெறுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை கேள்வியுற்ற பொஹொட்டுவவின் பலமிக்க அமைச்சர்கள் “அவரை விமர்சித்துள்ள” நிலையில், எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானித்துள்ளனர்.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.