உகண்டாவை காட்டி டுபாயை திசை திருப்ப கனவு காண்கிறார் நாமல்

உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை கொண்டு வருமாறு நாமல் ராஜபக்ஷ எமக்கு நையாண்டி செய்கிறார் நக்கல் அடிக்கிறார்.
நாங்கள் நம்மளுக்கு தெளிவாக சொல்கிறோம் நீங்கள் உகண்டாவை சுட்டிக்காட்டி டுபாயிலும் அபுதாபியிலும் செய்துள்ள கொடுக்கல் வாங்கல்களை மறந்து விடுவோம் என்று நினைக்காதீர்கள்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்.
நாமல் பேபி நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம்.
ராஜபக்ஷ ஆட்சிகளின் போது மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் ஊழல் மோசடிகள் திருடர்கள் போட்டி போட்டு கொண்டு சூறையாடிய பணம் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து விட்டோம் என்றார்.
(Visited 3 times, 1 visits today)