இலங்கையில் மாசி கருவாட்டுக்குள் சிக்கிய மர்மம் – விற்பனையாளர் அதிரடி கைது

தங்காலையில் மாசி கருவாடு விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததற்காக தங்காலை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மாசி கருவாடு விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மாசி கருவாடு விற்பனை செய்யும் போர்வையில் இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் 28 வயதானவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேகநபர் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 4 visits today)