ஐரோப்பா

ஜெர்மனியில் மர்மம் : கல்லறைகளில் QR குறியீட்டுடன் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களால் பரபரப்பு!

ஜெர்மனியின் பொலிஸார் ஒரு மர்மமான சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முனிச் நகரில் அமைந்துள்ள கல்லறைகளில் மர்மமான QR குறியீட்டுடன் பொறிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்களை அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்த.

இந்த குறியீடுகள் கல்லறையில் புதைக்கப்பட்ட நபரின் பெயரையும் கல்லறையில் அதன் இருப்பிடத்தையும் காட்டுகின்றன. வேறு எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை.

பல தசாப்தங்களாக பழமையான கல்லறைகள் மற்றும் இதுவரை மர சிலுவை மட்டுமே உள்ள புதிய கல்லறைகள் இரண்டிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வால்ட்ஃபிரைட்ஹாஃப், சென்ட்லிங்கர் ஃப்ரீட்ஹாஃப் மற்றும் ஃப்ரீட்ஹாஃப் சோல்ன் கல்லறைகளில் சமீபத்திய நாட்களில் இந்த ஸ்டிக்கர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 57 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்