பெர்முடா கடற்பகுதியின் அடியில் காணப்படும் மர்மம்- புதிய கண்டுப்பிடிப்பு!
பல மர்மங்கள் புதைந்துக் கிடக்கும் பெர்முடா தொடர்பான புதிய கண்டுப்பிடிப்பை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பாறை அடுக்கு, தீவுக்கூட்டத்தின் நடுவில் கடலில் மிதப்பது போன்ற தோற்றப்பாடு தெரிவதாக ஆய்வாளர்கள் இயற்பியல் ஆராய்ச்சி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வில் அதன் பாறை தோற்றப்பாடு, அமைப்பு தொடர்பில் விளக்கியுள்ளனர்.
பொதுவாக , எரிமலைத் தீவுகள், மக்மா குழம்புகள் என்பன பூமியின் ஆழத்தில் புதைந்துக்கிடக்கும். அவை பூமியின் மேலோட்டத்தை மேலே தள்ளுகின்றன. ஆனால் பெர்முடாவைப் பொறுத்தவரை, அதை அடிப்படையாகக் கொண்ட எரிமலைகள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக செயலில் இல்லை எனக் கூறப்படுகிறது.
டெக்டோனிக் தட்டின் நடுவில் உள்ள இந்த கட்டமைப்பின் தடிமன் உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக, கடல் மேலோட்டத்திற்கு கீழே ஒரு கடினமான பாறை ஓடு காணப்படுவதாகவும், அந்த அமைப்பு பெர்முடா பகுதியில் இல்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெர்முடாவில் கடைசியாக பெரிய வெடிப்பு ஏற்பட்டது எனவும், இது இந்த பாறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.





