காத்தான்குடியில் கரையொதுங்கிய மர்ம பொருள்!
மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மர்மப் பொருள் நேற்று (13) மாலை கரையொதுங்கியுள்ளது.
சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் , கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





