ஆஸ்திரேலியா வானில் தோன்றிய மர்ம ஒளி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா வானில் நேற்று இரவு மர்ம ஒளி அவதானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவதானிக்கப்பட்டது இது விண்கல் அல்ல எனவும் அது ரஷ்ய ரொக்கெட் எனவும் தெரியவந்துள்ளது.
மெல்போர்னில் இருந்து மவுண்ட் புல்லர் வரை வசிப்பவர்கள் இந்த பிரகாசமான ஒளியைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனை 30 முதல் 40 வினாடிகள் வரை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய தேசிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணில் இருந்து பூமிக்கு வரும் ரஷ்யாவின் சோயுஸ்-2 ரொக்கெட்டாக இருக்கலாம் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
இந்த விண்வெளி பரிசோதனை குறித்து ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
(Visited 15 times, 1 visits today)