உலகம்

‘அதிக உடல் நடுக்கம்’ ஏற்படுத்தும் மர்ம நோய் ; உகாண்டாவில் சுமார் 300 பேருக்கு பாதிப்பு

உகாண்டாவின் ‘பண்டிபுக்யோ’ (Bundibugyo) மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்மக் காய்ச்சலால் ஏறக்குறைய 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு மக்களால் ‘டிங்கா டிங்கா’ என்றழைக்கப்படும் அந்த மர்மக் காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைத்தான் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.அந்த நோயினால் அவதியுறுவோருக்குக் காய்ச்சலும் அதிக அளவில் உடல் நடுக்கமும் ஏற்பட்டு, நடப்பதுகூட சிரமமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை அந்த நோயால் எந்தவோர் உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை மருத்துவர் ஒருவர் கூறினார்.

சிகிச்சை பெறும் நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்து விடுகிறார்கள் என்றும் ‘பண்டிபுக்யோ’ மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் அந்த நோய் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த நோய்க்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டுச் சுகாதார அமைச்சுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், விரைவில் அந்த நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

அந்த நோயைப் போன்று இதற்கு முன்னர் 1518ஆம் ஆண்டு பிரான்சில் ‘டேன்சிங் ப்ளேக்’ எனப்படும் மர்மநோய் பரவியது.

அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி உயிரிழக்கும் அளவுக்குத் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

(Visited 36 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!