சிங்கப்பூர் வானில் தோன்றிய மர்ம கரும்புகை – குழப்பத்தில் மக்கள்
சிங்கப்பூர் செந்தோசா தீவில் திடீரென தோன்றிய மர்ம கரும்புகை வளையம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு அச்சம் கலந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வினோதமான காட்சி நேற்று ஆகஸ்ட் 7 அன்று “danenrdnslm5” என்ற TikTok பயனரால் பகிரப்பட்டது.
வீடியோவைப் பகிர்ந்த நூருதீன் செலாமட், அவரும் அவரது நண்பர்களும் சென்டோசாவில் உள்ள தஞ்சோங் கடற்கரையில் சுற்றுலா சென்றபோது கரும்புகை வளையத்தைக் கண்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
முதலில் அது தேனீக் கூட்டமாக இருக்கலாம் என்று எண்ணிய நூருதீன் ஓட்டம் பிடிக்க எண்ணினார், ஆனால் அது தேனீக் கூட்டம் இல்லை என்பதை உறுதி செய்தார்.
அங்கிருந்த மற்றவர்கள் வளையம் விலகிச் செல்லும்போது அதைப் பின்தொடர்ந்தது சென்று புகைப்படம் எடுத்தனர்.
கரும்புகை மெல்ல மெல்ல களைந்து சில நிமிடங்களில் வளையம் மறைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை கேட்டறிய வானிலை ஆய்வகத்தை ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் தொடர்பு கொண்டுள்ளது.