மர்மமான பந்து வடிவ குப்பைகள்; ஒன்பது கடற்கரைகளை மூடிய சிட்னி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உருண்டை வடிவிலான இடிப்பாடுகள் கரை ஒதுங்கியதை அடுத்து, ஒன்பது கடற்கரைகளை அந்நகரம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி14) மூடியது.
கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு சிட்னியில் உள்ள கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
இந்நிலையில், கடற்கரையில் வெள்ளை மற்றும் சாம்பல் நிற உருண்டை வடிவிலான பொருள்கள் கரை ஒதுங்கியது. அவை என்னவென்று தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.
அவற்றில் பெரும்பாலானவை கோலிக் குண்டு அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றைப் பத்திரமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
(Visited 2 times, 1 visits today)