இஸ்ரேல் புகைப்படத்தால் விலகிய மர்மம் – பீதியில் காசா மக்கள்
பதற்றமான போர் சூழலில் காச பகுதிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க இஸ்ரேல் முன்வந்து சாலை மார்க்கமாக நிவாரண பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதித்தது.
ஆனால் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையே ஐநா மீட்பு அமைப்பினர் காஜாவில் எரிபொருள் தீர்ந்து வருவதாகவும், மருத்துவமனைகளில் இரவு வரை மட்டுமே எரிபொருட்கள் இருக்கும் எனவும், இதனால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் செயல்படாமல் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
அதற்கு பதில் அளித்த இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எரிபொருள் சேகரிப்பு கிடங்கு இருப்பதாகவும், அவர்களிடம் தற்போது 5 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், செயற்கைக்கோள் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது.
எரிபொருள் கிடைக்குமா என ஹமாஸ் அமைப்பிடம் கேளுங்கள் என என பதில் அளித்துள்ளது. மேலும் காசா பகுதிக்குள் எரிபொருள் விநியோகத்தை எந்த வழியிலும் அனுமதிக்க முடியாது எனவும் இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.