நைஜீரியாவில் பரவி வரும் மர்ம நோய் : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
நைஜீரியாவில் மர்மமான நோய் ஒன்று மக்களிடையே பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மர்மமான நோயால் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 177 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வயிற்று வீக்கம், அடிவயிற்றில் திரவம் குவிதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல், காய்ச்சல் மற்றும் ஒட்டுமொத்த பலவீனம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் நைஜீரியாவின் மூன்று கிராமங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் நோய் அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை அணுகுமாறு அறிவுத்தியுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)