மியன்மார் நிலநடுக்கம் : இடிந்து விழுந்த கட்டடம் – 43 பேரை தேடும் மீட்பு குழு!

மியன்மாரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கட்டடத்திற்குள் 43 பேர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
களத்தில் மீட்பு பணியாளர்கள் ஆம்புலன்ஸ் சேவையுடன் தயார் நிலையில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.
(Visited 19 times, 1 visits today)