மருத்துவமனையை குறிவைத்து தாக்கிய மியன்மார் இராணுவம் – 34 பேர் படுகொலை!
மியான்மர் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் முன்னணி கிளர்ச்சியாளர் ஆயுதப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அழிக்கப்பட்டுள்ளது.
இதில் 34 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏபிசி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு மாநிலமான ரக்கைனில் (Rakhine) உள்ள பொது மருத்துவமனையே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரக்கைனில் மீட்பு சேவைகளுக்கான மூத்த அதிகாரி வை ஹுன் ஆங் (Wai Hun Aung) ஜெட் போர் விமானம் ஒன்று இரவில் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மியான்மரின் உள்நாட்டுப் போர் காரணமாக பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ரக்கைனில் உள்ள மருத்துவமனை முக்கிய சுகாதாரப் பராமரிப்பாக இருந்து வந்த நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





