செய்தி வட அமெரிக்கா

நியூயார்க்கில் மசூதிக்கு வெளியே சுடப்பட்ட இஸ்லாமிய குரு மரணம்

நியூயார்க்கிற்கு அருகிலுள்ள மசூதிக்கு வெளியே சுடப்பட்ட ஒரு இமாம்(தொழுகையை முன் நின்று நடத்தும் இஸ்லாமியக் குரு) இறந்துவிட்டார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நியூ ஜெர்சியின் நெவார்க் நகர காவல்துறை, இந்த சம்பவத்திற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

“ஹசன் ஷெரீப் 2006 ஆம் ஆண்டு முதல் நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்,” என்று ஷெரீப் பணியாற்றிய அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் லிசா ஃபார்ப்ஸ்டீன் கூறினார்.

“அவரது மறைவை அறிந்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எங்கள் இரங்கலை அனுப்புகிறோம்.”

அந்த நபர் இமாம் என்பதையும், சம்பவம் ஒரு மசூதிக்கு வெளியே நடந்தது என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விசாரணை நடந்து வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து, அமெரிக்கா முழுவதும் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி