உலகின் முன்னணி பணக்காரர் பட்டியலில் தன் இடத்தை இழந்தார் மஸ்க்!
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மீண்டும் உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் எலோன் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் டாலர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கடந்த ஆண்டில் எலோன் மஸ்க் 31 பில்லியன் டாலர்களையும், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 23 பில்லியன் டாலர்களையும் இழந்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)