விளையாட்டு

இன்று மும்பை – குஜராத் அணிகள் மோதல்.! தோற்றால் வெளியேற்றம்

இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் மைதானத்தில் இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். இதில் வெற்றி பெறும் அணி ‘குவாலிஃபயர் 2’ சுற்றில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும்.

ஆனால், இன்றைய போட்டியில் (எலிமினேட்டர்) தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான்.இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்த குஜராத் டைட்டன்ஸ், கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்த பிறகு மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதுவரை இரு அணிகளுக்கும் இடையே 7 போட்டிகள் நடந்துள்ளன. இதில் குஜராத் 5 போட்டிகளில் வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த நான்கு போட்டிகளில் குஜராத்தை மும்பை அணி வீழ்த்தவில்லை.

நேற்றைய தினம் குவாலிபயர் – 1 போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணியை அசால்டாக வீழ்த்தி, ஆர்சிபி அணி இறுதி போட்டிக்கு 9 ஆண்டுகள் கழித்து முன்னேறி இருக்கிறது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ