உலகம்

சீன உளவாளி என சந்தேகத்தின் அடிப்படையில் பந்தயப் புறாவை 8 மாதம் சிறையில் வைத்திருந்த மும்பை பொலிஸார்!

சீன தேசத்து உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மும்பை போலீஸாரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த புறா ஒன்று 8 மாத ‘சிறைவாச’த்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

பகை தேசங்கள் மத்தியில் உளவு பார்ப்பதற்கு என செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் வந்துவிட்டன. இந்த உளவு சாதனங்களை ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் அபரிமிதமான உளவுத் தகவல்களை பெற முடியும். இந்த நவீன அறிவியல் முன்னேற்றங்கள் இல்லாத காலத்தில் தகவல் தொடர்புக்கும், அதன் வழியே உளவு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பறவைகளை, குறிப்பாக புறாக்களை நாடுகள் பயன்படுத்தி உள்ளன.

எட்டு மாதங்களுக்கு முன்னர் அப்படியான சந்தேகத்தின் பெயரில், புறா ஒன்றினை மும்பை பொலிஸார் கைது செய்தனர். செம்பூரில் உள்ள ஆர்சிஎஃப் எனப்படும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அன்ட் ஃபெர்டிலைசர்ஸ் காவல் நிலைய பொலிஸாருக்கு, சந்தேகத்துக்கு இடமான புறா ஒன்று குறித்து தகவல் வந்தது. இதனையடுத்து அந்த புறாவை தங்கள் கஸ்டடியில் எடுத்து, ஆராய்ந்த பொலிஸார் ஆச்சரியமடைந்தனர். புறாவின் காலில் தாமிரம் மற்றும் அலுமினியத்தாலான வளையங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. இவற்றோடு புறாவின் இரு இறக்கைகளின் சிறகுகளிலும் சீனாவின் மாண்டரின் மொழியை ஒத்த எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.

இறக்கையில் சந்தேக எழுத்துக்கள்

ரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் புறா கண்டெடுக்கப்பட்டதும், அதனிடம் சீனத்து சங்கேத மொழிகள் அடையாளம் காணப்பட்டதும் பொலிஸாரின் ஐயத்தை தூண்டின. இதனையடுத்து புறா கால் வளையங்கள் தடயவியல் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சந்தேகத்துக்குரிய புறாவும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. புறா மீதான ஐயங்கள் அடிப்படையில் பொலிஸாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதே வேளையில் புறாவை விடுவிப்பதற்கான முகாந்திரம் எதுவும் பிடிபடவில்லை.

கடந்தாண்டு மே 17 அன்று இவ்வாறு பிடிபட்ட புறா, காவல்துறையினர் பொறுப்பில் பரேலில் உள்ள பாய் சகர்பாய் டின்ஷா பெட்டிட் என்ற விலங்குகளுக்கான மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டது. மாதங்கள் கழிந்த பிறகும் சந்தேகத்துக்குரிய புறா குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது பொலிஸார் விசாரணையில் குழப்பமே மிஞ்சி இருந்தது. இதனிடையே உரிய காரணமின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் அப்பாவி புறா குறித்த தகவல் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் தரப்பில் இணையத்தில் தேடியதில், மும்பை பொலிஸாரால் சிறை வைக்கப்பட்டிருக்கும் புறாவின் பின்புலம் தெரிய வந்தது.

தைவான் தேசத்தில் பந்தயப் புறாவாக வளர்க்கப்பட்ட புறாக்களில் ஒன்று திசை மாறி, நாடுகளின் எல்லை தாண்டி மும்பையில் சிக்கியது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சிறைவாசமிருக்கும் புறாவை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. பொலிஸார் நடைமுறைகள் முடிவடைந்து ஒரு வழியாக, புறாவானது நேற்றைய தினம் வானில் பறக்க விடப்பட்டது. முன்னதாக அந்த புறா முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதா, நீண்ட தூரம் பறப்பதற்கான உடல் தகுதி இருக்கிறதா என்பதற்கான மருத்துவ சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்