முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு விஜய் வீரவணக்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று, முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)