சனத் நிஷாந்தவின் மனைவிக்கு தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி் பதவி?
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பிரேரணை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக தெரிவைக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஜனவரி 25 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் அரசியல் [பிரவேசம் தொடர்பில் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சமரி பெரேரா மேலும் தெரிவிக்கையில் ” மறைந்த கணவரின் தனிப்பட்ட செயலாளராக இருந்தும், அவரது அரசியல் விவகாரங்களை நிர்வகித்து வந்தாலும், அப்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் கூறினார். “எனக்கு இன்னும் அத்தகைய எண்ணம் இல்லை.”
“எவ்வாறாயினும், புத்தளம் மாவட்ட மக்களும், நாட்டு மக்களும், கட்சித் தலைமையும் எனது கணவரின் வெற்றிடத்தை நிரப்பி அவருக்குப் பதிலாக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால், நான் அதை பரிசீலிக்கலாம். எனது நான்கு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இப்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” என அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.