ஈரான் மீது ஐக்கிய நாடுகளின் தடைகளை மீண்டும் விதிக்க நடவடிக்கை

ஈரான் மீது ஐக்கிய நாடுகளின் தடைகளை மீண்டும் விதிக்கும் செயல்முறையை, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தம்மை நம்பவைக்கும் வகையில், செயற்படுவதற்கு ஈரானுக்கு 30 நாள் அவகாசம் வழங்கப்படலாம் என்றும் ராஜதந்திரிகளை கோடிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக்காலப்பகுதிக்குள் தெஹ்ரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த உறுதிமொழிகளை வழங்கும் என்று குறித்த இராஜதந்திர தரப்புக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
முன்னதாக மூன்று ஐரோப்பிய இராஜதந்திரிகளும் ஒரு மேற்கத்திய இராஜதந்திரியும் இன்று ஈரானுடன் பேச்சுவார்த்தையை நடத்தியபோதும், ஈரான் உறுதியான உறுதிமொழிகளை வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)